கரூரில் விஜய் பரப்புரையின்போது லோக்கல் ரவுடியை வைத்து, காலணி வீசியதாக செந்தில்பாலாஜி மீது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா குற்றம் சாட்டியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா, படப்பிடிப்பு தளங்களுக்கு மட்டும் குறித்த நேரத்தில் சென்றுவிடும் விஜய், கரூருக்கு குறித்த நேரத்தில் விஜய் செல்லவில்லை என்றும் மக்கள் காத்திருக்கின்றனர் என்ற பொறுப்பு வேண்டாமா? எனவும் தெரிவித்தார்.
கரூர் சம்பவத்தில் விஜய் செய்த 5 தவறுகளை பட்டியலிட்டு பேசிய பிரேமலதா, கரூர் பெருந்துயர் சம்பவத்துக்கு தமிழக அரசும், த.வெ.க-வும் தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். லோக்கல் ரவுடியை வைத்து, விஜய் மீது காலணி வீசியவர் செந்தில்பாலாஜி என்று குற்றம் சாட்டிய பிரேமலதா, விஜயை பார்க்க வேண்டும் என விரும்பி வந்த கூட்டம் காலணி வீசுமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.