சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் 2வது நாளாக இன்று (மார்ச் 18) நடைபெற்றது. பல்வேறு முக்கியமான மக்கள் நல பிரச்னைகள் குறித்து உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினர். அவர்களுக்கு துறையின் அமைச்சர்கள் பதிலளித்தனர்.
அப்போது அதிமுக எம்.எல்.ஏ செல்லூர் ராஜு ஓராண்டில் ராமேஸ்வரத்தில் எப்படி விமான நிலையம் அமைக்க முடியும் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, நீரில் தெர்மாகோல் விடுவது எளிது, விமான நிலையம் அமைப்பது அப்படியல்ல என்றார்.
டி.ஆர்.பி.ராஜாவின் பதிலைத் தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ “தெர்மாகோல், தெர்மாகோல் என்று கிண்டலடிக்கிறீர்கள், அதிகாரி சொன்னதை தான் செய்தோம்.” என பேசினார்.