Saturday, August 2, 2025
HTML tutorial

பிளேயிங் 11ல கூட ‘இடம்’ கிடைக்காது லெப்ட் & ரைட் வாங்கிய ‘சேவாக்’

நீண்ட நாட்கள் இழுபறியாக இருந்த இந்திய டெஸ்ட் கேப்டன் பதவிக்கு, சுப்மன் கில்லை BCCI தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கில் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

பும்ராவுக்கு தான் கேப்டன் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் வேலைப்பளு காரணமாக அவருக்கு கொடுக்க முடியவில்லை. இந்தநிலையில் கில் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதற்கு, முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ” வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில், எப்போதாவது மட்டுமே கில் சிறப்பாக விளையாடுவார். அவருக்கு பிளேயிங் லெவனிலேயே இடம் உறுதியாக இல்லை. அப்படியிருக்கும்போது, கில்லுக்கு ஏன் கேப்டன் பதவியை கொடுக்க வேண்டும்? பும்ராவால் முடியவில்லை என்றால், அடுத்ததாக ரிஷப் பண்ட் இருக்கிறார்.

கில் நல்ல Fitness உடன் இருக்கிறார் என்கிற ஒரே காரணத்துக்காக, அவருக்கு கேப்டன் பதவியை கொடுத்திருக்கலாம் என்று கருதுகிறேன். என்னைக் கேட்டால் ரிஷப் பண்டிற்கு தான் கேப்டன் பதவியை அளித்திருக்க வேண்டும். விக்கெட் கீப்பராக இருக்கும் இவரால், Pitchஐ சரியாக கணித்து, பேட்டர்கள் என்ன செய்வார்கள் என்பதையும் கணிக்க முடியும்,” என்று வருத்தமாக பேசியிருக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை சுப்மன் கில்லின் சராசரி இந்தியாவில் 42 ஆகவும், வெளிநாட்டில் 29 ஆகவும் உள்ளது. அதாவது வெளிநாட்டு தொடர்களில் கில் பெரும்பாலும் சொதப்பி விடுகிறார். இதை சுட்டிக்காட்டி தான் சேவாக் இவ்வாறு பேசியிருக்கிறார், என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News