நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில், சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் ஆஜராக நேற்று சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், இன்று மாலை 6 மணிக்கு சீமான் காவல்நிலையத்தில் ஆஜராக இருப்பதாக தெரிவித்தனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இன்று மாலை ஆஜராக உள்ள நிலையில் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீயணைப்புத் துறை, ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.