Friday, February 14, 2025

சீமானால் டெபாஸிட் கூட வாங்க முடியாது – திமுக மாணவரணி தலைவர் ராஜிவ்காந்தி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சீமானால் டெபாஸிட் கூட வாங்க முடியாது என்று திமுக மாணவரணி தலைவர் ராஜிவ்காந்தி தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுகவி்ன் மாணவரணி நிர்வாகி ராஜிவ்காந்தி, தந்தை பெரியார் பற்றி அவதூறாக பேசிவரும் சீமான், அடுத்து அம்பேத்கரை பற்றியும் பேசுவார் என்று கூறினார். தமிழீழம் தொடர்பான சீமானின் உண்மையான முகம் வெளியே வந்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இயக்குநர் என்ற போர்வையில் சீமான் சிங்கள அரசுக்கு பல்வேறு உதவிகளை புரிந்துள்ளார் என்றும் ராஜீவ்காந்தி குற்றம்சாட்டினார். புலிகளின் முக்கிய அமைவிடங்கள் குறித்து சிங்கள அரசுக்கு தகவல் கொடுத்துள்ளார் என்றும் ராஜிவ்காந்தி தெரிவித்தார்.

Latest news