தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டினார்.
நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், விஜயலட்சுமியை அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாக பேசியதாக கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.
இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி குறித்து அவதூறாக பேசியதற்காக உச்சநீதிமன்றத்தில் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். மேலும் விஜயலட்சுமிக்கு எதிரான அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.