Saturday, December 6, 2025

மீனுக்கு அதிரடி செக்யூரிட்டி! 24 மணிநேரம் கண்ணிமைக்காத ராணுவம்! 17 போர் கப்பல்கள், ட்ரோன்கள்!

பொதுவாக அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் போன்றோர் விஐபி பாதுகாப்பைப் பெறுவதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் மீனுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதை நீங்கள் கற்பனை செய்துள்ளீர்களா? இது உண்மை. வங்கதேசத்தில் ஒரு மீனுக்கு ராணுவத்தால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்காக 17 போர்க்கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளன.

அக்டோபர் 2025 முதல் நடக்கிற Mother Ilish Conservation Operation நடவடிக்கையின் கீழ், ஹில்சா மீன்கள் பாதுகாக்கப்படுகின்றன. இதற்காக 17 போர்க்கப்பல்கள், ரோந்து படகுகள், கடற்படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் காத்திருக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. சந்த்பூர், பாரிஷால், குல்னா உள்ளிட்ட 9 கடலோர பகுதிகளில் அக்டோபர் 4 முதல் அக்டோபர் 25 வரை மீன்பிடிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மீனின் பெயர் ஹில்சா (Hilsa). வங்கதேசத்தின் தேசிய சின்னமான இந்த மீன், வெள்ளி நிறத்தில் பளபளப்பாகவும் சுவையாகவும் இருக்கும். மக்கள் இதை கடலின் ராணி என அழைக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் வங்காள விரிகுடாவிலிருந்து ஆறுகளுக்கு முட்டை இடும் பயணத்திற்கு ஹில்சா மீன்கள் செல்கின்றன.

ஹில்சாவை பாதுகாக்க வேண்டிய காரணம், காலநிலை மாற்றம், கடல் மட்ட உயர்வு மற்றும் அதிக மீன்பிடித்தலால் அதன் எண்ணிக்கை குறைந்திருப்பதாகும். உலகின் ஹில்சா உற்பத்தியில் 70%க்கும் அதிகமானவை வங்காளதேசத்திலிருந்து வருகின்றன. ஆனால், வேட்டையாடும் முறை காரணமாக இருப்பு 30% குறைந்து விட்டது.

சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரிக்கும் படி, ஹில்சா மீன்கள் பாதுகாப்பு இல்லையெனில் அடுத்த 10 ஆண்டுகளில் கணிப்புள்ள அளவில் குறையும் அபாயம் உள்ளது. வங்காளதேச ராணுவம் போர்க்கப்பல்கள் மற்றும் அதிநவீன ரோந்து விமானங்களின் உதவியுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மீனவர்களை கடலுக்குள் நுழைவதை தடுப்பதில் 24 மணி நேர கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News