தங்கம் விலை அதிரடி சரிவு: நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி…

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஆகஸ்ட் 10ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.13,950-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.15 மற்றும் சவரனுக்கு ரூ.120 விலை குறைந்தது.

ஆகஸ்ட் 11ஆம் தேதி காலையில் தங்கத்தின் விலை உயர்ந்திருந்த நிலையில், மாலையில் சற்று குறைந்தது. இதன்படி, ஒரு கிராம் ரூ.14,150-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்ட் 12ஆம் தேதி கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.14,200-க்கும், சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.1,13,600-க்கும் விற்பனையானது. ஆகஸ்ட் 13ஆம் தேதி மேலும் கிராமுக்கு ரூ.20 மற்றும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,220-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை திடீரென குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.14,040-க்கும், ஒரு சவரன் ரூ.1,12,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.1,440 குறைந்துள்ளதால் நகை வாங்க காத்திருந்தவர்களுக்கு இது சற்று ஆறுதலை அளித்துள்ளது.

வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளிப் பார் ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு ரூ.5,000 குறைந்துள்ளது.

Related News

Latest News