புரூஸ் லீ-யின் உயிரை குடித்த குடிநீர்!!

330
Advertisement

தன்னிகரற்ற தற்காப்பு கலை மன்னன் புரூஸ் லீயின் மரணத்திற்கு அதிகப்படியான தண்ணீர் குடித்தது தான் காரணம் என்று அமெரிக்கா  மருத்துவர்கள் கண்டறிந்த கூறியுள்ள தகவலொன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதனால் இதனால் சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக புரூஸ்லியின் மரணத்தை சுற்றி உலவி வந்த மர்மங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

மருத்துவர்கள் ஒன்றிணைத்து கண்டறிந்துள்ள இந்த விடை புரூஸ் லீயின் மரணத்திற்கு விடையை தருவது மட்டுமல்லாமல் அதிக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கிறது.

இந்நிலையில், அமெரிக்க மருத்துவர்களும், உடற்கூறு விஞ்ஞானிகளும் புரூஸ்லியின் மரணம் குறித்து கடந்த 2 ஆண்டுகளாக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். இதுதொடர்பான ஆய்வறிக்கையை அந்த மருத்துவர்கள் சமர்ப்பித்தனர். அதில், “புரூஸ்லி 1973-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி காலை வழக்கம் போல உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு தலை வலி ஏற்பட்டுள்ளது. படுக்கையில் படுத்த அவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்திருக்கிறார். இதுதான் புரூஸ்லியின் மரணம் குறித்த டாக்டர்கள் அறிக்கையில் இருக்கிறார். புரூஸ்லி உடல்நலம் குன்றிய தினத்தில் அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன்கள் மூலம் ஒரு விஷயம் தெளிவாகிறது. அதாவது, புரூஸ்லியின் சிறுநீரகம் செயலிழக்க தொடங்கி இருக்கிறது.

நல்ல ஆரோக்கியமான ஒருவருக்கு இப்படி சிறுநீரகம் திடீரென செயலிழந்து போகாது. ஆனால் புரூஸ்லியின் சிறு வயதில் இருந்தே ஒரு பழக்கம்தான் அவருக்கு இந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறு வயது முதலாகவே அதிக அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும் பழக்கம் புரூஸ்லிக்கு இருந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல், இறப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார். இதனால் அளவுக்கு அதிகமான தண்ணீரையும், மதுவையும் செரிமானம் செய்ய அவரது சிறுநீரகத்தால் முடியவில்லை. சம்பவம் நிகழ்ந்த அன்றைய தினமும் உடற்பயிற்சி முடித்ததும், நிறைய தண்ணீரை புரூஸ்லி குடித்திருக்கிறார். இதனால் அவர் சிறுநீரகம் திடீரென செயலிழந்து, அவரது மூளை வீக்கம் அடைந்துள்ளது. இதுவே அவர் உயிரிழப்பதற்கு காரணமாகி விட்டதுஎன அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் திகைத்துள்ளனர்.