Wednesday, July 16, 2025

பிரசவிக்கும் ஆண்

பெண்கள்தானே குழந்தை பெற்றெடுப்பார்கள்.
பெண்ணினம்தானே இனப்பெருக்கம் செய்யும்…
ஆனால், ஆணினம் பிரசவிப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஆண் இனங்களிலேயே பிரசவிக்கும் திறன்கொண்டது
கடல்குதிரைதான். கடல்குதிரை பார்ப்பதற்கு முதலைக்
குட்டியைப் போல் இருக்கும். இது ஒருவகை மீன்தான்.

சுமார் 6 செ.மீமுதல் 17 செ.மீவரை நீளமும், 4 முதல் 14கிராம்
வரை எடையும் கொண்டது கடல்குதிரை.

குதிரை போன்ற முக அமைப்பு, குரங்கு போன்ற வால் அமைப்பு,
இனப் பெருக்கம் செய்தல், கண்களை எந்தப் பக்கமும் திருப்புதல்,
குதித்துக் குதித்து ஓடுதல் போன்ற பல்வேறு சிறப்புகள் உடையவை
இந்தக் கடல்குதிரைகள்.

இதன் உடல் நன்கு நீண்டு, வளையங்களால் அமைந்ததுபோலவும்,
வாய் நீண்டு குழல்போலவும், மார்புப் பகுதி சற்று அகன்று விரிந்தும்
காணப்படுகிறது.

உடலின் பக்கவாட்டில் நீண்ட கோடுகள், புள்ளிகள் காணப்படுகின்றன.

பெண் கடல்குதிரைகள் தங்களின் முட்டைகளை ஆண் கடல்
குதிரைகளின் வால் பகுதியிலுள்ள இனப்பெருக்கப் பைகளில்
விட்டுவிடும். முட்டைகள் பொரிவதும் சிறிதுகாலம் வளர்வதும்
இந்தப் பையில்தான்.

முட்டைகள் பொரிந்து குஞ்சு வெளிவரும் நேரத்தில் தந்தைக்
குதிரைக்கு பிரசவ வலி வரும். அப்போது நீருக்கடியில் உள்ள
புல்லுக்கிடையே கிடந்து மிகவும் சிரமப்படும். உடலை முன்னும்
பின்னுமாக அசைத்து வளைக்கும். இப்படி வளையும்போது
பையின் தசைகள் விரிவடையும். ஒவ்வொரு முறை வளையும்
போதும் ஒவ்வொரு குஞ்சு வெளிவரும்.

இவற்றை ஆண் கடல்குதிரைகள் கங்காருபோல் நன்கு பேணி,
ஆறு வாரங்கள் பாதுகாத்துக் குஞ்சுகளாகப் பொரிக்கின்றன.

குஞ்சுகளின் எண்ணிக்கையும் 50 முதல்100வரை இருக்கும்.
மற்ற முட்டைகள் வீணாகிவிடும். இவ்வளவு குஞ்சுகளையும்
தாயால் பராமரிக்க முடியாது. சில குட்டிகள் மற்ற
இனங்களுக்கு இரையாகிவிடும்.

ஏறத்தாழ ஒரு சென்டிமீட்டர் இருந்தாலும் இவற்றுக்குப்
பெற்றோரின் பாதுகாப்பு அதிகமாகவே இருக்கும்.

உலகில் மொத்தம் 35 வகையான கடல்குதிரைகள்
காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் ஆழம்
குறைந்த கடற்பகுதிகளான கடல் புல், பவளப்
பாறைகள் நிரம்பிய இடங்களில் வாழ்கின்றன.
கடல்குதிரைகள் தங்களின் வால் பகுதியைப்
புல்லில் கட்டிக்கொண்டு நிற்கமுடியும்.

இதன் உடல் கடினமான எலும்பு போன்ற பொருட்களால்
ஆனாலும், நண்கு, பெங்குவின் முதலியன இவற்றை
வேட்டையாடி உண்கின்றன. ஆனால், பெரும்பான்மையான
மீன்கள் இவற்றைக் கண்டுகொள்வதில்லை.

கடல் குதிரையின் முக்கிய உணவு இறால்.
ஒரு கிலோ மீட்டர் தொலைவைக் கடக்க கடல்குதிரைக்கு
மூன்று நாட்களாகும். இவற்றின் ஆயுட்காலம் நான்கு
ஆண்டுகள்தான். கடல்குதிரையின் இனப்பெருக்க வேகம் குறைவு.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news