தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்களின் மாநில மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் வரும் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது என்றும் மாணவ-மாணவிகள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
முதல் 5 நாட்கள் நல்லொழுக்கத்தை போதிக்கும் வகுப்புகள் நடத்தப்படும் என்று கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ், தொண்டு நிறுவனங்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டவர்கள் மாணவர்களுக்கு நல்லொழுக்கங்களை வழங்குவார்கள் என்று தெரிவித்தார்.
10 மற்றூம் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை அல்லது செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும் என்றும் மாணவர்கள் பயப்படாமல் தேர்வெழுத முன்வர வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.