https://www.instagram.com/p/CYTYi_KoPpE/?utm_source=ig_web_copy_link
பறவைகள் ஒரு சிறிய கரண்டியின் வடிவம்போல பறந்த அதிசய நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பறவைகள் பறப்பதே மிகவும் அழகாக இருக்கும். அதுவும் ஏராளமான பறவைகள் ஒரு ஸ்பூன்போல வடிவம்கொண்டு பறந்தது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்து இணையத்தில் வைரலாகியுள்ளது.
இஸ்ரேலிய வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஆல்பர்ட் கெஷேட் சமீபத்தில் வடக்கு ஜோர்டான் பள்ளத்தாக்கில் பயணித்தார். அந்த அதிகாலைப் பயணத்தின்போது காட்டுச் செடிகள், பறவைகளைப் படமெடுக்கத் திட்டமிட்டிருந்தார். அப்போது ஓரிடத்தில் பறவைகள் கூட்டமாக இருப்பதைக் கண்டார்.
இதனால், அந்த இடத்திலேயே சுமார் 6 மணி நேரம் காத்திருந்தார். அப்போது அவர் எதிர்பார்த்தபடியே வித்தியாசமான ஒரு கரு கிடைத்தது.
ஆம்…
அந்தப் பறவைக்கூட்டம் ஒரு கரண்டியின் வடிவில் பறக்கத் தொடங்கியது. இதனால் மகிழ்ச்சி வானில் பறக்கத் தொடங்கிய ஆல்பர்ட் சட்டென அந்தப் பறந்த பறவைக்கூட்டத்தை அற்புதமாகப் படம்பிடித்தார்.
தனது பிறந்த நாளில் இப்படியொரு அற்புதமான காட்சி அமைந்தது அவருக்கு பறவைகளின் மிகப்பெரிய வாழ்த்தாக அமைந்தது. அந்த அரிய புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.
அதில், என் பிறந்த நாள் பரிசாக இந்தப் புகைப்படம் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அது உடனே இணையத்தில் வைரலாகத் தொடங்கியது.
ஜோர்டான் பள்ளத்தாக்கில் அந்தப் பறவைக்கூட்டம் இப்படிப் பறந்து அனைவரின் ஆச்சரியத்தில் மூழ்கவைத்துள்ளது.