கஞ்சா வழக்கில் ஆஜராகாத சவுக்கு சங்கர் மீண்டும் கைது..!!

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தங்கியிருந்த போது அவரது காரில் இருந்தும் அவரது உதவியாளரிடமிருந்தும் தடை செய்யப்பட்ட 2.5 கிலோ கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சவுக்கு சங்கர் ஆஜராகாததால் அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

தேனி கஞ்சா வழக்கில் ஆஜராகாத சவுக்கு சங்கருக்கு சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Related News

Latest News