பெற்றார் நிச்சயிக்கும் திருமணத்திலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்… இளைஞரின் விநோதக் கோரிக்கை

376
Advertisement

பெற்றோர் நிச்சயிக்கும் திருமணத்திலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்னும் விநோதக் கோரிக்கையால் பிரபலமாகியிருக்கிறார் ஓர் இளைஞர்.

லண்டன் வாழ் பாகிஸ்தானியான முகம்மது மாலிக் பாகிஸ்தான் நாட்டிலுள்ள பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 29 வயதாகும் இவர் குறும்புத்தனமான ஒரு காரியத்தைச் செய்திருக்கிறார்.

தனக்கு மணப்பெண் தேடுவதற்காக டேட்டிங் சென்றும் அது சாதகமாக அமையவில்லை. எங்கே தனக்குப் பெற்றோரே பெண் பார்த்து திருமணம் செய்துவைத்து விடுவார்களோ என்னும் அச்சத்தில் மாலிக் விநோதமான ஒரு செயலைச் செய்திருக்கிறார்.

அதாவது, லண்டன் மற்றும் பர்மிங்ஹாம் தெருக்களில் நிச்சயிக்கும் திருமணத்திலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று விளம்பரப் பலகைகளை நிறுவினார். இந்த விளம்பரப் பலகைகள் பலரின் கவனத்தை ஈர்த்தது.

மேலும், தனக்கு மணப்பெண் தேடுவதற்காக ஓர் இணையதளம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். அதில், பெற்றோருக்கு ஒரே மகனான என்னையும் என் பெற்றோரையும் பார்த்துக்கொள்ள ஓர் அன்பான வரன் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நண்பர் ஒருவர் கொடுத்த யோசனையின் அடிப்படையில் மாலிக் இந்தப் புதுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தனது தாயை சமாதானப்படுத்திய பின்னரே இதுபோன்ற முயற்சியில் இறங்கியுள்ளார்.
முயற்சிக்கு வெற்றி கிடைத்ததா என்பது இனிமேல்தான் தெரியவரும்.