வாரிசு படத்தில் நடிச்சாலும் அஜித்துக்கு தான் சப்போர்ட்! சரத்குமார் அடிச்ச அந்தர் பல்டி

174
Advertisement

கோலிவுட்டில் பரபரப்பாக பற்றியெரிந்து கொண்டிருக்கும் சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்தில், சற்றே தண்ணீர் ஊற்ற முயற்சித்துள்ளார் சரத்குமார்.

வாரிசு பட ஆடியோ லான்ச்சில் சரத்குமார் மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு விஜயை சூப்பர்ஸ்டார் என குறிப்பிட்டு பேசியதை தொடர்ந்து, பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி அவ்வாறே கூற பெரும் சர்ச்சை கிளம்பியது.

ரஜினி ஓரங்கட்டபட்டு விட்டதாக ஆதங்கப்பட்ட அவரின் ரசிகர்கள், பிஸ்மியின் வீட்டிற்கே சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய சரத்குமார் சூப்பர்ஸ்டார் என்பது ஒற்றை நபரை குறிக்கும் டைட்டில் அல்ல என்றும், வாழ்க்கையில் சாதனை படைத்த, சினிமாவில் பல கூட்டங்களின் கவனத்தை ஈர்க்கும் அனைத்து நடிகர்களுமே சூப்பர்ஸ்டார் தான் என விளக்கம் அளித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து அஜித், விஜய் சேதுபதி என அனைவருமே சூப்பர்ஸ்டார் தான் என சரத்குமார் கூறிய கருத்துக்கு என்ன இவர் இப்படி பல்டி அடித்து விட்டார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.