நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை நடைபெற்றது. அப்போது புதிய கல்விக் கொள்கை தொடர்பாக அவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
இதற்கிடையே, தேசிய கல்விக் கொள்கை பற்றி பேசிய ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபே “தமிழ் மிகவும் பழமையான மொழி என்கிறார்கள். ஆனால், சமஸ்கிருதம் என்பது அதனைவிட பழமையான மொழி. நாடு முழுவதும் அனைத்து கோயில்களிலும் வழிபாட்டு மொழி சமஸ்கிருதம்தான். தேர்தலுக்காக கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள்” என அவர் பேசியுள்ளார்.