Thursday, January 15, 2026

CSKவுக்கு ‘தாவும்’ சஞ்சு சாம்சன்? என்ன சொல்லி ‘இருக்காரு’ பாருங்க!

நீண்ட நாட்களாகவே ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன், அணி மாறப்போவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு ராஜஸ்தான் அணியில் அவருக்கு போதிய மரியாதை கிடைக்காததே காரணம் என்று கூறப்படுகிறது.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சாம்சன் கடந்த 2013ம் ஆண்டு முதல், ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு சீசன் சென்னை போல ராஜஸ்தானுக்கும் சிறப்பாக அமையவில்லை. இதனால் சாம்சன் – அணி நிர்வாகம் இடையே உரசல் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இந்தநிலையில் இன்ஸ்டாகிராமில் சாம்சன் வெளியிட்டிருக்கும் புகைப்படம், சமூக வலைதளங்களில் மிகப்பெரும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. மனைவியுடன் மஞ்சள் கோட்டை தாண்டுவது போல புகைப்படம் வெளியிட்டு, அதற்கு கீழே Time to Move அதாவது ‘நகர்வதற்கான நேரம் வந்துவிட்டது’ என்று தெரிவித்து இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள், ” அப்போ சாம்சன் CSKக்கு வர்றது கன்பார்ம் தான் போல” என்று கொண்டாடி வருகின்றனர். இதனால் Trading அல்லது மினி ஏலம் என இரண்டில் ஏதாவது ஒரு வழியில், சென்னை சஞ்சு சாம்சனை அணிக்குள் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

Related News

Latest News