சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் சமந்தா! கவலையில் ரசிகர்கள்

56
Advertisement

கணவர் நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்கு பின் வித்தியாசமான கதைக்களங்களையும், தனித்துவமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வந்த சமந்தாவை மயோசிட்டிஸ் நோய் கட்டிபோட்டுள்ளது.

இந்த அரிய வகை auto immune நோய் பாதிப்புக்காக தொடர்ந்து சிகிச்சை எடுத்து வரும் சமந்தா அண்மையில் ஆயுர்வேத சிகிச்சைக்கு மாறினார்.

இந்நிலையில், சிச்சைக்காக சமந்தா தென்கொரியாவிற்கு செல்ல இருப்பதாக தெலுங்கு ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், தான் தென்கொரிய அழகுசாதன பொருட்களை பயன்படுத்துவதாக சமந்தா முன்னதாக நேர்காணல்களில் பகிர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.