திடீரென தள்ளிப்போகும் சமந்தாவின் பட ரிலீஸ்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

190
Advertisement

கடந்த சில மாதங்களாக அரியவகை தசை நோயான மயோசிட்டிசுடன் போராடி வந்த சமந்தா, நோயின் தீவிரம் குறைந்து, படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறார்.

குணசேகர் இயக்கத்தில் தெலுங்கு, தமிழ், கன்னட மற்றும் மலையாள மொழிகளில் பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக இருந்த ஷகுந்தலம் திரைப்படம் வெளியாவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சமந்தா மற்றும் தேவ் மோகன் இணைந்து நடித்த இந்தப் படத்தின் ரிலீஸ் காலவரையின்றி ஒத்திவைக்க படுவதாக, படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா creations அறிவித்துள்ளது. பட ரிலீஸ் தள்ளிப் போனதை அடுத்து சமந்தா ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.