பட நிகழ்ச்சியில் கண்ணீர் விட்ட சமந்தா! ஆறுதல் கூறிய ரசிகர்கள்

52
Advertisement

மயோசிட்டிஸ் எனும் தசை தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா, சிகிச்சைக்கு நடுவிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருவது மட்டுமில்லாமல் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிளும் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில், திங்கட்கிழமை நடைபெற்ற ‘ஷகுந்தலம்’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்ற சமந்தா, இயக்குநர் குணசேகர் பேசுகையில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார்.

பின்னர், பேசிய சமந்தா எத்தனை போராட்டங்களுக்கு மத்தியிலும், சினிமா மீது தான் வைத்திருக்கும் காதல் மாறாது என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

Advertisement

இதையடுத்து, அவரின் ரசிகர்கள் ‘We are with you Sam ‘ போன்ற வாசகங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு சமந்தாவுக்கு தங்கள் ஆறுதலை வெளிப்படுத்தினர்.

ஹிந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் தயாராகி உள்ள இந்த படம் உலக முழுவதும் பிப்ரவரி 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும். ஷகுந்தலம் படத்தில் தான் சமந்தா முதல் முறையாக இயக்குனர் குணசேகரின் இயக்கத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.