‘நான் இன்னும் சாகவில்லை’  நேர்காணலின் நடுவே கண்ணீர் விட்ட சமந்தா

172
Advertisement

சமந்தா நடித்த யசோதா திரைப்படம் வெளியாக உள்ளதை அடுத்து, அவர் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், அண்மையில் அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில், அவரை பாதித்துள்ள மயோசிட்டிஸ் நோயை பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது சில நாட்கள் நன்றாகவும் சில நாட்கள் மோசமானதாகவும் இருப்பதாக சமந்தா தெரிவித்துள்ளார்.

சில நாட்களில் தன்னால் ஒரு அடியை கூட எடுத்து வைக்க முடியாதென உணர்வதாக கூறியுள்ள சமந்தா, ஆனாலும் தான் கடந்து வந்த தூரம் தன்னை ஆச்சரியப்பட வைப்பதாக பகிர்ந்துள்ளார்.

தன்னுடைய உடல்நிலை பற்றி மிகவும் மோசமான தகவல்கள் பரப்பப்டுவதாக கவலை தெரிவித்த சமந்தா, அவர்கள் குறிப்பிடுவது போல உயிருக்கு ஆபத்தான நிலையில் தான் இல்லை என்றும், கடினமான இந்த நோயை தொடர்ந்து தைரியமாக எதிர்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

பல சவால்களை கடந்து வந்துள்ளதாகவும், இதிலும் வெற்றி பெறுவேன் என கூறிய சமந்தா, இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன், இப்போதைக்கு சாகப் போவதில்லை என கண்ணீர் விட்டவாறு பேசிய காட்சிகள் காண்போரை கண்கலங்க வைத்து வருகிறது.