இதுக்கு பேரு Danceஆ? சல்மான் கானை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்

50
Advertisement

சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ‘கிஸி கா பாய் கிஸி கி ஜான்’ படத்தின் டீசர் முன்பே வெளியான நிலையில், ட்ரைலர் ரிலீசுக்கு முன் படத்தில் இருந்து ‘நயோ லக்டா’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.

21 மணி நேரத்தில் 18 மில்லியன் பார்வைகளை கடந்துள்ள இந்த பாடலின் இசை ரசிக்கும்படியாக உள்ளது என சில பாராட்டுக்கள் வந்தாலும் கூட, இந்த பாடலுக்கு சல்மான் ஆடியுள்ள வித்தியாசமான நடனம் சமூகவலைதளங்களில் பேசுபொருளாக மாறி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

‘இது exerciseஆ இல்ல danceஆ?’, ‘புது dance step போட்டா இப்படியா கலாய்ப்பாங்க’, ‘சல்மான் எப்பவும் danceல surprise கொடுத்துட்டே இருப்பாரு’ என நெட்டிசன்கள் வித விதமாக கலாய்த்து வருகின்றனர். எது எப்படியோ, அப்படி என்னதான் அந்த danceல இருக்குன்னு போய் பாக்குறவங்கலாலயே, அந்த பாட்டுக்கு views ஏறிட்டு இருக்குன்னு தான் சொல்லனும்.

Advertisement