நடிகர் சல்மான்கானுக்கு திடீர் திருமணமா ? உண்மை என்ன ?

423
Advertisement

பாலிவுட்டில் திருமணம் ஆகாத நடிகர் சல்மான்கான் மட்டுமே. சல்மான்கான் ஐஸ்வர்யா ராயை காதலித்து பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர் .பின்னர் கத்ரீனா கைஃப் உட்பட பலருடன் சல்மான் கான் கிசுகிசுக்கப்பட்டார். தற்போது திடீரென சல்மான்கான் நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவை திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது . இருவரும் மோதிரம் மாற்றி ரகசிய திருமணம் செய்து கொண்டது போன்ற போட்டோக்கள் வெளியாகி பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சல்மான் கானுடன் சோனாக்‌ஷி சின்ஹா சில படங்களில் சேர்ந்து நடித்து இருக்கிறார்.இதனால் வெளியான புகைப்படங்களில் உண்மை இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.ஆனால் பின்னர் அது போட்டோஷாப்பில் எடிட் செய்யப்பட்ட போலியான புகைப்படம் என்று சல்மானின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர் .