ரஷியாவில் சமூக வலைதளங்கள் பல இடங்களில் முடக்கம்

351
Beautiful cityscape of the downtown with a waterfront in a street lighting at night. Volga region of Russia, the city of Yoshkar-Ola
Advertisement

உக்ரைன் மீது ரஷியா கடந்த 24-ந்தேதி தொடங்கிய போர் தொடர்த்து நடந்து வருகிறது . தினமும் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தரை, வான், கடல் என மும்முனை தாக்குதல்களை நடத்தி வருகிறது. உலக நாடுகள் பல வழிகளில் தனிமைப்படுத்தினாலும், ரஷியா பொருட்படுத்தாமல் தனது தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இதற்கிடையே உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா நிறுத்த வேண்டும் என்று சமூக வலைதளங்களான பேஸ்புக், யூடியூப், இண்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் போன்றவற்றில் எதிர்ப்புக்களும் தொடர்ந்து பரவி வருகிறது.

இதனை தடுக்கும் விதமாக ரஷியாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் பல இடங்களில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் போருக்கு எதிரான எதிர்ப்புக் கருத்துகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுந்து வருவதால் ரஷியா இந்த நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது .