உலகில் 200 நாடுகளில் வாழும் ஒரே இனம் தமிழ்தான்.
ஆனாலும், ரூபாய்த் தாளில் தமிழ் எழுத்துகளும் எண்களும்
இடம்பெற்றுள்ள ஒரே நாடு மொரிஷீயஸ் தீவுகள் மட்டுமே.
இந்நாட்டின் பணமும் ரூபாய் என்றே குறிக்கப்படுகிறது.
தமிழ் எழுத்துகளுக்கான எண்கள்
௧ = 1
௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
௰ = 10
கிழக்கு ஆப்பிரிக்கா அருகேயுள்ள மொரிஷீயஸ் தீவில்
75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.
சுமார் 2045 சதுர பரப்பளவு கொண்டது இந்தத் தீவு.
இத்தீவில் தமிழர்கள் பலர் அமைச்சர்களாகவும்
நீதிபதிகளாவும் பதவி வகித்துள்ளனர். சில பள்ளிகளில்
தமிழ்ப் பாடம் கற்றுத் தரப்படுகிறது.
அரசுத் தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில்
தமிழ்ச் சேவையும் உள்ளது. பொதிகைத் தொலைக்
காட்சி ஒளிபரப்பும் இங்குள்ளது-
பூலோக சொர்க்கமான இந்நாட்டில் தங்கத்துக்கு
வரிவிதிப்பதில்லையாம். எனவே, இங்கு தங்கத்தின்
விலை குறைவு.
கரும்புத் தோட்டங்கள் இங்கு நிறைந்துள்ளதால்
சர்க்கரை உற்பத்தி ஆலைகள் அதிகம் உள்ளது.