திகில் படங்களைப் பார்க்க ரூ 95 ஆயிரம் இலவசம்

27
Advertisement

FINANCE BUZZ என்னும் அமெரிக்க நிதி நிறுவனம்
10 நாட்களில் 13 திகில் படங்களைப் பார்ப்பதற்கு 1, 300 டாலர்களைத்
தருவதாக அறிவித்துள்ளது.

இந்திய மதிப்பில் இதன் தொகை கிட்டத்தட்ட ரூ 95 ஆயிரம் ஆகும்.

திரைப்படத்தின் பட்ஜெட் அளவு படத்தின் தரத்தைப் பாதிக்கிறதா,
குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படங்களைவிட
அதிகப் பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படங்கள் அதிக
திகிலூட்டுகின்றனவா என்பதை அறிந்துகொள்வதற்காக
இந்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Advertisement

அதேசமயம், படம் பார்ப்பவரின் இதயத் துடிப்பு FITBIT
கருவி கொண்டு கண்காணிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இதற்காகத் தேர்வுசெய்யப்படும் ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும்
ஆயிரத்து 300 டாலர் தொகையும், 50 டாலர் கிஃப்ட் அட்டையுடன்
படம் பார்க்க வந்துசெல்லும் செலவுகளையும் தருவதாகத் தெரிவித்துள்ளது.

FINANCE BUZZ நிறுவனம் SAW, AMITYVILLE HORROR,
A QUITE PLACE, A QUITE PLACE 2, CANDYMAN, ‘
INSIDIOUS, THE BLAIR WITCH PROJECT, SINISTER,
GET OUT, THE PURGE, HELLOWEEN(2018) PARANORMAL
ACTIVITY மற்றும் ANNABELLE ஆகிய படங்களைப் பார்ப்பதற்காக
இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

ரசிகர்களைத் திக்குமுக்காடச் செய்தது இந்த அறிவிப்பு.