Wednesday, January 7, 2026

‘பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 வழங்க வேண்டும்’.. போஸ்டர் ஒட்டிய அதிமுக

தமிழக அரசு தமிழர் பொங்கல் திருநாளை முன்னிட்டு பச்சரிசி, வெல்லம், முழு நீள கரும்பு மட்டுமே பொங்கல் தொகுப்பாக அறிவித்ததை தொடர்ந்து அதிமுக ஆட்சியில் கொடுத்தது பச்சரிசி,வெல்லம், முழு நீள கரும்பு, முந்திரி திராட்சை என அனைத்தையும் வழங்கி 2500 ரூபாய் பணம் அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டது.

அப்பொழுது எதிர் கட்சியாக இருந்த திமுகவினர் பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்புடன் 5000 வழங்க போராட்டத்தை முன்னெடுத்தனர். தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக அரசு பொங்கல் சிறப்பு தொகை போல ரூபாய் தொகை ஏதும் அறிவிக்காததால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவினர் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்புடன் ரூபாய் 5000 வழங்க வேண்டிய வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் “தமிழக அரசே, தமிழக அரசே, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரூபாய் 5000 வழங்க வேண்டும்.” என கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் அதிமுக தொழில்நுட்ப அணியினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

Related News

Latest News