Sunday, December 7, 2025

இண்டிகேட்டரைப் பயன்படுத்தாத ஓட்டுநருக்கு ரூ.25,000 அபராதம்

வாகனத்தில் இண்டிகேட்டரைப் பயன்படுத்தாத ஓட்டுநர் ஒருவருக்கு ரூ.25,000 (இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் துபாயில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு தொழில்முனைவோர் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, துபாயில் இருக்கும் ஒரு நண்பர் தனது இன்டிகேட்டரைப் பயன்படுத்தாத காரணத்திற்காக ரூ.25,000 ரூபாய் அபராதம் விதித்தார். இந்தியாவில் இவ்வளவு கடுமையான விதிகள் வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்? என பதிவிட்டுள்ளார்.

துபாயில் போக்குவரத்து விதிகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. ஓட்டுநர் உரிமம் பெறுதல், புதுப்பித்தல் போன்ற பல்வேறு சேவைகள் டிஜிட்டல் முறையில் நடைபெறுகின்றன. இந்தியாவில் போக்குவரத்து விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News