Friday, July 4, 2025

அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள ரு.1,000 கோடி ஒதுக்கீடு

2025-26 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் தாக்கல் நடைபெற்று வருகிறது. இதில் அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள ரு.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.50 கோடியில் 500 அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படும்.

சுமார் 3 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். அதற்காக ரு.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ரூ.65 கோடியில், 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தரம் உயர்த்தப்படும்.

ரூ.56 கோடியில், 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.

ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news