Wednesday, December 17, 2025

பிரபல ரவுடியும் பாஜக நிர்வாகியுமான படப்பை குணா கைது

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா. கொலை, கொலை முயற்சி, கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் இவருக்கு எதிராக காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் மதுரமங்கலம் கிராமத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரை குணா மிரட்டியதோடு, அவரை தாக்கியதாக குணா மீது சுங்குவார்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட சுங்குவார்சத்திரம் போலீசார் ரவுடி குணா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து. நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்துள்ளனர்.

படப்பை குணா பாஜக காஞ்சிபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்டத் தலைவராக உள்ளார். இவர் குண்டர் சட்டத்தில் கைதாகி 6 மாதங்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

Related News

Latest News