தினேஷ் கார்திக்கின் கழுத்தை நெரித்த ரோஹித்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

444
Advertisement

தினேஷ் கார்த்திக்கின் கழுத்தை நெரித்து கொண்டு ரோஹித் சர்மா திட்டிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கடந்த 20 ஆம் தேதி  நடைபெற்று முடிந்த நிலையில் ,முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 208 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 30 பந்துகளில் 71 ரன்களை விளாசினார்.இமாலய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா 19.2 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 211 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

இந்த நிலையில், ஆட்டத்தின் 11.6 ஓவரின் போது உமேஷ் யாதவ் வீசிய பந்தில் மேக்ஸ்வெல் எட்ஜாகி கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். பந்து பேட்டில் பட்ட சத்தம் அனைவருக்கும் கேட்டு அவுட் கேட்ட போதும், தினேஷ் கார்த்திக் அமைதியாக இருந்தார்.இதனால் கோபமடைந்த ரோகித், தினேஷ் கார்த்திக்கின் கழுத்தை நெறித்துக்கொண்டு ” ஒலுங்கா ரிவ்யூவ் கேட்க மாட்டீயா” என கேட்டார். எனினும் ரோகித் சர்மா இதனை நிஜமான கோபத்துடன் செய்யவில்லை. விளையாட்டாக தான் செய்வது போன்று இருந்தது.