வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளை

342

பெரம்பலூர் துறைமங்கலம் ஔவையார் தெரு பகுதியை சேர்ந்தவர்  பிச்சைபிள்ளை.

இவர் தனது வீட்டின் பூட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளனர். 

இந்த நிலையில் அருகே வீட்டில் குடியிருக்கும் பெண் ஒருவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு, பிச்சைபிள்ளைக்கு  தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் பேரில் வீட்டினுள் சென்று பார்த்த பொழுது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 4 சவடன் தங்க நகை மற்றும் 60ஆயிரம் ரொக்கம் பணம் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டிவி ஆகியவை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளதால், போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.