கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நான்கு முனை சந்திப்பில் உலக ரோட்டரி தினத்தை முன்னிட்டு ரோட்டரி கிளப் சார்பில் சாலை பாதுகாப்பு பேரணி தொடங்கியது. இந்த பேரணியை வட்டார போக்குவரத்து அலுவலர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணியின் போது எமதர்மன் மற்றும் சித்திரகுப்தன் வேடமணிந்த நபர்கள் சாலையில் ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை பாச கயிறு வீசி ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றி எடுத்துரைத்து பாசகயிறு விடுவத்து அனுப்பினார். மேலும் சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.