புதுக்கோட்டை அருகே இருசக்கர வாகனங்களில் வைத்து ஆற்று மணல் கடத்திய 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பெருமாள்பட்டி வெள்ளாற்று பாலத்தின் அருகே சாக்கு மூட்டைகளில் ஆற்று மணல் திருட்டுத்தனமாக கடத்தப்படுவதாக , அறந்தாங்கி வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது.
அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் வைத்து மணல் மூட்டைகளை கடத்திச் சென்ற 3 பேரை வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். மேலும், அவர்களிடம் இருந்து மணல் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.