இந்திய அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேன் Rinku Singh, விரைவில் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கவிருக்கிறார். நடப்பு IPL தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக Rinku ஆடிவருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் Priya Sarojக்கும், திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
பின்னர் அது உண்மையில்லை என்று தெரிய வந்தது. இந்தநிலையில் தற்போது Priya Saroj – Rinku Singh இருவருக்கும், திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 26 வயது Priya Saroj, சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
Rinku – Priya இருவருக்கும் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாற, பெற்றோர் சம்மதத்திற்காக இருவரும் காத்திருந்தனர். இருதரப்பிலும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டதை அடுத்து, வருகின்ற ஜூன் 8ம் தேதி லக்னோவில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது. இதையடுத்து சமூக வலைதளங்களில் இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துமழை பொழிந்து வருகின்றனர்.