Sunday, December 28, 2025

கரூர் சம்பவம் குறித்து அவதூறு : ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கைது

தமிழக வெற்றிக் கழக தலைவர் கடந்த 27-ந்தேதி கரூரில் பிரசாரம் செய்த போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது ஐகோர்ட் நீதிபதி செந்தில்குமார், இச்சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவு பிறப்பித்தார்.

விசாரணையின் போது தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுக்கு தலைமை பண்பு இல்லை’என கருத்து தெரிவித்து இருந்தார்.இதற்கு சமூக வலைதளங்களில் சிலர் ஆதரவாகவும், சிலர் அவதூறு பரப்பும் வகையிலும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், நீதிபதி குறித்து விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதாக ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜன் என்பவரை சென்னை தெற்கு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

Related News

Latest News