60 மணி நேரத்துக்கும் அதிகமாக சுரங்கப்பாதை கால்வாய்க்குள்
சிக்கியிருந்த நாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையர் நகரில் வசித்துவரும் ஹெலன்
சிறிய நாய்க்குட்டி ஒன்றை வளர்த்துவந்தார். சம்பவத்தன்று காலையில்
ஹெலனின் காலைச் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தது அந்த நாய்.
அப்போது வீட்டிலுள்ள தொலைபேசி ஒலித்தது.
அதனை எடுத்துப்பேசுவதற்காக ஹெலன் வீட்டுக்குள் சென்றார்.
தொலைபேசியில் பேசிவிட்டு வெளியே வந்துபார்த்தபோது தனது
செல்லப்பிராணியைக் காணாமல் தவித்தார்.
வீடு, தோட்டம் முழுவதும் தேடிப் பார்த்தார். எங்குமே நாய்க்
குட்டியைக் காணவில்லை.
30 நிமிடம் தேடியும் கண்டுபிடிக்கமுடியாததால், அவருக்கு ஒரு
சந்தேகம் எழுந்தது. அங்குள்ள சுரங்கப்பாதை கால்வாய்க்குள்
விழுந்திருக்கலாம் என்று கருதினார். அதனைத் தொடர்ந்து
அங்குசென்று பார்த்தபோது நாய்க்குட்டி குரைக்கும் சத்தம் கேட்டது.
அந்த சுரங்கப்பாதை, வேறுபல சுரங்கப்பாதையுடன் தொடர்பு
கொண்டுள்ளதால், எந்நேரமும் அரசின் பாதுகாப்பில் இருந்துவருகிறது.
அதனால், ஹெலனால் காப்பாற்றும் முயற்சியில் இறங்கமுடியவில்லை.
உடனடியாகத் தீயணைப்புத் துறையைத் தொடர்புகொண்டார்.
அவர்களும் விரைந்து வந்து நாயைத் தேடத் தொடங்கினர். தீயணைப்பு
வீரர்கள் பல்வேறு கருவிகள் உதவியுடன் அங்கு புதையத் தொடங்கிய
நாயை ஒரு மணி நேரத்தில் பத்திரமாக மீட்டனர்.