மனிதனே மனிதக்கழிவை துப்புரவு செய்யும் வேலை தான் மிகவும் மோசமான, ஆபத்தான, சுயமரியாதைக்கு வாய்பளிக்காத வேலை என Telegraph இதழ், அண்மையில் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், கிட்டத்தட்ட 5 மில்லியன் இந்தியர்கள் மனிதக்கழிவு துப்புரவு வேலை செய்வதாகவும் அதில் வருடத்திற்கு 2000 பேர் வரை இறந்து போவதாகவும் தெரியவந்துள்ளது.
இப்பணியில் ஈடுபடுபவர்கள் குழிக்குள் செல்லும் போது பாம்புகள், சிலந்தி, ஆக்ஸிஜன் குறைபாடு மற்றும் விஷ வாயு தாக்கம் ஆகியவை இறப்புக்கான காரணங்களாக உள்ளது. மேலும், இந்த பணியை செய்வதற்கு குறிப்பிட்ட ஒரு சமூகத்தை நிர்பந்திப்பதற்கு நாட்டில் நிலவும் சாதிய ஒடுக்குமுறை முக்கிய பங்கு வகிக்கிறது.
1993 ஆம் ஆண்டு வெளிவந்து 2013இல் திருத்தம் செய்யப்பட்ட மனித கழிவை மனிதனே அகற்றுவதற்கு தடை விதிக்கும் சட்டம் அமலில் இருந்தாலும் நடைமுறையில் செயல்படாமல் இருப்பது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.