ரீல்ஸ் மோகத்தால் இளம்பெண் ஒருவர் ஓடும் ரெயிலில் படிக்கட்டில் நின்றபடி ஆடிச்செல்லும் ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவிலை சேர்ந்த அந்த பெண் நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துள்ளார். அப்போது ஆபத்தை உணராமல் படிக்கட்டில் நின்றபடி சினிமா பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். வீடியோ வைரலானதால் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார்.