சியோமி நிறுவனம் தனது புதிய ரெட்மி நோட் 17 5ஜிஸ்மார்ட்போனை இந்தியாவில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே சீனாவில் அறிமுகமான இந்த மாடல், தற்போது இந்திய சந்தையிலும் விற்பனைக்கு வருகிறது. “mAhster Edition” என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமாக 8000mAh பேட்டரி இடம்பெறுகிறது.
சியோமி இந்தியா வெளியிட்ட தகவலின்படி, இதில் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 7 இன்ச் டிஸ்ப்ளே, டெக்ஸ்சர் வடிவமைப்புடன் கூடிய பின்புற பேனல் மற்றும் வட்ட வடிவ கேமரா மாட்யூல் இடம்பெற்றுள்ளன. மேலும், குவால்காம் ஸ்னாப்டிராகன் ஜென் 4 பிராசஸர், 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் தொடங்கும். இதை அமேசான் இந்தியா , சியோமியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஆஃப்லைன் விற்பனை மையங்கள் மூலம் வாங்க முடியும். பெரிய பேட்டரி மற்றும் சக்திவாய்ந்த அம்சங்களால் இந்த மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
