Monday, February 9, 2026

இந்தியாவில் அறிமுகமாகிறது ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போன்

ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2026 ஜனவரி 6 ஆம் தேதி இந்திய சந்தையில் ரெட்மி நோட் 15 அறிமுகமாகவுள்ளது.

ரெட்மியின் தாய் நிறுவனமான ஷாவ்மி, சமீபத்தில் ரெட்மி 15சி என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 11,999. இதனைத் தொடர்ந்து ரெட்மி நோட் 15 இந்திய சந்தைக்கு அறிமுகமாகவுள்ளது.

ரெட்மி நோட் 15 அறிமுகமாவதுடன், ஷாவ்மி 17 மற்றும் ஷாவ்மி 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Related News

Latest News