ராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், ரூ. 738 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
மாநில நலன்கள், உரிமைகளை பறித்து செயல்படும் பாஜகவுடன் எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி வைத்துள்ளது. பாஜகவை அதிமுக ஆதரிக்க கொள்கை இருக்கிறதா? குறைந்தபட்ச செயல்திட்டம் இருக்கிறதா? என்றால் இல்லை.
தவறு செய்தவர்கள் அனைவரும் அடைக்கலமாகி தங்களின் தவறுகளில் இருந்து தப்பிக்கும் வாசிங் மெசின்தான் பாஜக. அதில், உத்தமராகிவிடலாம் எனக் குதித்திருக்கும் இபிஎஸ்ஸுக்கு, கூட்டணிக்கு ஆள்சேர்க்கும் அசைன்மெண்ட் கொடுத்துள்ளனர். மக்கள் மீது அக்கறை உள்ளவர்கள் யாரும் அவருடன் கூட்டணி வைக்கமாட்டார்கள்.
.இவ்வாறு அவர் பேசினார்.