Tuesday, April 22, 2025

இதுனால தான் த்ரிஷாவுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா? பகீர் கிளப்பிய பிரபலம்

1999ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை வென்ற திரிஷா, ஜோடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.

‘மௌனம் பேசியதே’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான திரிஷா, தொடர்ந்து விஜயின் ‘கில்லி’ படத்தில் கதாநாயகியாக நடித்து முன்னணி தமிழ் நடிகை என்ற இடத்தை பிடித்தார்.

நயன்தாரா, ஹன்சிகா என பல பிரபல நடிகைகள் அடுத்தடுத்து திருமண வாழ்க்கைக்குள் சென்று கொண்டிருக்க, த்ரிஷாவுக்கு ஏன் இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்ற கேள்வி பரவலாக நிலவி வந்த வண்ணம் தான் உள்ளது.

இந்நிலையில், பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன், இரவு நேர பார்ட்டிகளுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ள திரிஷா குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி விட்டதாகவும், திருமணம் செய்தால் இதற்கு இடையூறாக இருக்கும் என்பதனாலேயே த்ரிஷா கல்யாணம் செய்யாமல் இருக்கிறார் என கருத்து தெரிவித்துள்ளார்.

பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து நடிகைகளை தரக்குறைவாக விமர்சனம் செய்து வரும் சூழலில், தற்போது த்ரிஷாவை பற்றி வெளியிட்டுள்ள இந்த கருத்து சமூகவலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 

Latest news