Thursday, April 24, 2025

RCB-ய பாத்து ‘கத்துக்கங்க’ SRHக்கு ‘பறந்த’ அட்வைஸ்

பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, கடந்தாண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. இதனால் இந்த வருடமும் எதிரணிகளை அலறவிடும், முதல் 300 ரன்களை அடித்து வரலாற்று சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் களநிலமை படுமோசமாக இருக்கிறது. 2 வெற்றிகள் 6 தோல்விகளுடன் பாயிண்ட் டேபிளில் SRH பரிதாபமாக காட்சி அளிக்கிறது. இதில் இருந்து மீண்டு Play Off செல்ல வேண்டும் என்றால், அந்த அணி அடுத்த 6 போட்டிகளையும் வெல்ல வேண்டும்.

இந்தநிலையில் அணியின் தலைமை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி, பெங்களூருவை உதாரணம் காட்டி ஹைதராபாத்திற்கு அட்வைஸ் செய்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியுடனான, தோல்விக்கு பிறகு செய்தியாளர்களுக்கு வெட்டோரி பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ”கடந்த சீசனில் முதல் பாதியை மோசமாக ஆடிய RCB அணி, அதன்பிறகு மீதமுள்ள 6 போட்டிகளையும் தொடர்ச்சியாக வென்று, Play Offக்கு முன்னேறி அசத்தியது. அதேபோல சன்ரைசர்ஸ் அணியும் Comeback கொடுக்க வேண்டும்,” என்று பேசியுள்ளார்.

நடப்பு IPL சீசனில் ரஜத் படிதார் தலைமையிலான, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 போட்டிகளில் அசத்தலாக வென்று, மிகவும் பலமான அணியாக Play Off ரேஸில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Latest news