Tuesday, July 29, 2025

‘RCB’-வெற்றி விழா! கேள்விகளால் துளைக்கும் உயர்நீதி மன்றம்! ‘ஆர்சிபி’ எடுக்கப் போகும் முக்கிய முடிவு ?

பெங்களூருவில் RCB அணியின் வெற்றியைத் தொடர்ந்து நடந்த கூட்ட நெரிசல் காரணமாக 11 உயிர்கள் பலியாகிய அதிர்ச்சித் தாக்கம் நாட்டை முழுவதும் உலுக்கியுள்ளது. இதையடுத்து கர்நாடகா உயர்நீதிமன்றம் முக்கியமான 9 கேள்விகளை எழுப்பி, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் அரசை கடுமையாக கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

முதலாவதாக, இந்த நிகழ்வை எப்போது, யார் நடத்த முடிவு செய்தார்கள் என்பதைக் கேள்வியாக வைத்திருக்கிறது நீதிமன்றம்.

இரண்டாவதாக, அந்த நாளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதைக் கேட்கிறது.

மூன்றாவதாக, இத்தனை பெரிய கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஏதேனும் திட்டமிடல் நடந்ததா? எவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்டது என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நான்காவதாக, நிகழ்வில் அவசர கால மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனவா? இல்லையா என்ற கேள்வி முக்கியமானதாக உள்ளது.

ஐந்தாவதாக, நிகழ்வின் போது எத்தனை பேர் கலந்து கொள்ளலாம் என முன்கூட்டியே மதிப்பீடு செய்யப்பட்டதா? என்ற கேள்வியை முன்வைத்திருக்கிறது.

ஆறாவதாக, காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்பட்டதா? இல்லையெனில் ஏன் வழங்கப்படவில்லை? என்றும்,

ஏழாவதாக, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டது என்பதையும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

எட்டாவதாக, 50,000-க்கும் அதிகமானோர் பங்கேற்கும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பொதுவான செயல்பாட்டு முறைகள் இருந்ததா? அதை பின்பற்றியிருக்கிறார்களா? என்பதை மையமான கேள்வியாக கேட்டுள்ளது…

ஒன்பதாவதாக, இந்த நிகழ்வுக்கான அனுமதி கோரப்பட்டதா? அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டதா என்பது குறித்து நீதிமன்றம் தெளிவான பதிலை எதிர்நோக்குகிறது.

இந்த 9 கேள்விகளும், விழா விழாவாக இல்லாமல் வெகுவாக அலட்சியமாக நடைபெற்றதாக நீதிமன்றம் பார்கிறது. மக்களின் உயிரை ஆபத்துக்கு உட்படுத்தும் அளவுக்கு ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது என்ற கவலை வெளிப்படையாக உயர்நீதிமன்றத்தில் ஒலித்தது.

இப்போது, RCB மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது. எதிர்காலத்தில் RCB எடுக்கப்போகும் முடிவுகள், இவ்வாறான நிகழ்வுகள் மீண்டும் நடக்காத வகையில் பாதுகாப்பு முறைமை, கூட்ட மேலாண்மை, மற்றும் பொது பொறுப்பை முன்னிறுத்தும் விதமாக இருக்க வேண்டிய அவசியம் மிக அதிகமாகியுள்ளது.

RCBயின் வெற்றி மட்டும் அல்ல… அதனுடன் நடந்த இந்த துயர சம்பவமும் வரலாற்றில் பதிந்து விட்டது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News