Thursday, December 18, 2025

RCBக்கு ஆரம்பமே ‘அதிர்ச்சி’ ‘சூப்பர் ஸ்டார்’ வீரர் விலகல்?

அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் IPL பைனலில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இரண்டு அணிகளுமே இதுவரை கோப்பை வெல்லவில்லை என்பதால், இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்தநிலையில் RCB அணியின் நட்சத்திர வீரர் Phil Salt, இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என்று நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. Qualifier 1 போட்டியில் அதிரடியாக ஆடி அரை சதமடித்த Saltன் மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

குழந்தை எந்த நேரத்திலும் பிறக்கலாம் என்பதால், அவர் தாயகம் திரும்பி விட்டதாகக் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக RCBயின் பயிற்சி ஆட்டத்திலும் Salt காணப்படவில்லை. ஆனால் தலைமை பயிற்சியாளர் Andy Flower, கேப்டன் ரஜத் படிதார் இருவரும் Salt குறித்து, எந்தவொரு தகவலையும் கசிய விடாமல் ரகசியம் காக்கின்றனர்.

இதனால் இன்றைய ஆட்டத்தில் விராட் கோலியுடன் இணைந்து மயங்க் அகர்வால் ஓபனிங் இறங்கலாம் என தெரிகிறது. Saltக்கு மாற்று வீரராக, நியூசிலாந்து வீரர் Tim Seifertஐ பெங்களூரு களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News