தீபாவளியை முன்னிட்டு, தாயுமானவர் திட்டத்தின் கீழ் நாளை மற்றும் நாளை மறுநாள் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருள்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் முன்கூட்டியே, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி வந்து ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை மக்கள் அறியும் வகையில், அனைத்து ரேஷன்கடைகளிலும் தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.