Sunday, December 22, 2024

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

அரசு தரப்பிலிருந்து ஏதேனும் உதவியோ, மகளிர் உரிமை தொகை, பொங்கல் பரிசு தொகுப்பு, நிதி உதவி போன்ற உதவிகள்  கிடைக்க ரேஷன் கார்டு தேவைப்படும்.

ரேஷன் கார்டு இல்லை என்றால் அரசின் நலத்திட்ட உதவிகள் ஏதும் கிடைக்காது. 3 கோடி குடும்ப ரேஷன் கார்டுகள் செயல்பாட்டில் உள்ளன.  கடந்த மே 2021 முதல் இப்போதுவரை 15 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டும்  ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்க துவங்கிவிட்டனர்.

தனி சமையல் அறையுடன் வசிப்போர் இதுபோன்று விண்ணப்பித்தால் அவர்களுக்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள், புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட வேண்டும் என்பது அடிப்படையான விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் மகளிர் உரிமை தொகை  திட்டம் செயல்படுத்துவதை தொடர்ந்து , கடந்த வருடம் ஜூன் மாதம் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தப்பட்டதால், தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 7 மாதங்களில் 5,000 முதல் 8,000 ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

புதிய ரேஷன் கார்டுகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாமலும், அச்சிடும் பணிகளும் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டும் உள்ளதால் தமிழகம் முழுவதும் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விரைவில் எம்பி தேர்தல் நடைபெற உள்ளது.. ஆனால், தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டால் புதிய ரேஷன் கார்டுகளை அச்சடிக்க முடியாது என பேசப்பட்டு வருகிறது.

2 நாட்களுக்கு முன்பு, கார்டின் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய ரேஷன் கார்டுக்கு தேர்வு செய்யப்பட்ட தகுதியான நபர்களின் பட்டியலானது வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, விண்ணப்பித்தவர்கள் உடனே தங்களுடைய பெயர் பட்டியலை சரிபார்க்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இதனை தடைகளையும் தாண்டி நமது கையில் கிடைக்கும் அந்த ரேஷன் கார்டுகளை பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும். மீறி கார்டு தொலைந்துவிட்டால் https://www.tnpds.gov.in/ என்ற தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் தளத்திற்கு செல்லவேண்டும்.

இந்த காப்பியை பிரிண்ட் எடுத்து, உங்கள் ரேஷன் அட்டைக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் உணவு வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று இந்த நகலை சமர்ப்பித்தால், உங்களுக்கு மறுபடியும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.

-ரிதி ரவி

Latest news