தமிழ்நாடு அரசு தற்போது ரேஷன் அட்டைக்கு ரூ.5,000 ரொக்கம் வழங்க திட்டமிட்டு வருவதாக அரசு வட்டாரங்களில் பேசப்பட்டுவருகிறது. வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ. 5,000 ரொக்கம் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான நிதியை திரட்டுமாறு நிதித்துறைக்கு அரசு உத்தரவிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பொங்கலுக்கு சிறப்பு தொகுப்பான பச்சரிசி, வெல்லம், கரும்பு, ஏலக்காய், முந்திரி உள்ளிட்ட பொருட்களுடன் வேட்டி சேலையும், ரூ. 5000 ரொக்கமும் வழங்க திட்டமிட்டிருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.
இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வரவில்லை என்றாலும், விரைவில் இது குறித்தான அறிவிப்பு வரும் என்றும், தீபாவளி பண்டிகையின் போது இந்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் என்றும் சொல்லப்படுகிறது.