ரஷ்யாவிலும் கலக்கும் ராஷ்மிக்கா மந்தனா! குவியும் வெற்றிகள்

114
Advertisement

அண்மையில், ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு, ரஷ்யாவில் ‘புஷ்பா’ திரைப்படம் 700க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

சுகுமார் இயக்கிய தெலுங்கு மொழிப் படமான புஷ்பாவில் அல்லு அர்ஜுன், ராஷ்மிக்கா மந்தனா மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

இந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள மற்றும் ஹிந்தி மொழிகளில்  2021ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன புஷ்பா திரைப்படம் 350 கோடி வரை வசூலை அள்ளியது.

இந்நிலையில், தற்போது ‘புஷ்பா’ திரைப்படம் ரஷ்யாவில் 13 கோடி வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘புஷ்பா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் ஒரு புறம் மும்முரமாக நடந்து கொண்டிருக்க, ‘வாரிசு’ உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களின் ரிலீஸை எதிர்பார்த்து இருக்கிறார் ராஷ்மிக்கா.

குறுகிய காலத்தில் பல்வேறு மொழிகள் மற்றும் முக்கிய நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றது என ராஷ்மிக்கா திரைத்துறையில் வேகமாக வளர்ந்து வருவதாக சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.